×

அனுஷ்காவுடன் நடிக்க ஆர்வம் காட்டும் ஹாலிவுட் நடிகர்கள்

‘பாகுபலி’ புகழ் தேவசேனா அனுஷ்கா ஷெட்டி நடிக்கவிருக்கும் அடுத்தப்படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் ஒப்பந்தமாகவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை: ‘பாகுபலி’ புகழ் தேவசேனா அனுஷ்கா ஷெட்டி நடிக்கவிருக்கும் அடுத்தப்படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் ஒப்பந்தமாகவுள்ளதாக கூறப்படுகிறது. ‘பாகுபலி’ திரைப்படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் நடித்த ‘பாகமதி’ திரைப்படம் ரிலீசானது. அதைத் தொடர்ந்து எந்த திரைப்படங்களிலும் அனுஷ்கா ஒப்பந்தமாகவில்லை. அவர் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், மீண்டும் ஒரு
 

‘பாகுபலி’ புகழ் தேவசேனா அனுஷ்கா ஷெட்டி நடிக்கவிருக்கும் அடுத்தப்படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் ஒப்பந்தமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை: ‘பாகுபலி’ புகழ் தேவசேனா அனுஷ்கா ஷெட்டி நடிக்கவிருக்கும் அடுத்தப்படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் ஒப்பந்தமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

‘பாகுபலி’ திரைப்படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் நடித்த ‘பாகமதி’ திரைப்படம் ரிலீசானது. அதைத் தொடர்ந்து எந்த திரைப்படங்களிலும் அனுஷ்கா ஒப்பந்தமாகவில்லை. அவர் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் அனுஷ்கா நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பிரபல கதாசிரியர், இயக்குநர் கோனா வெங்கட் இயக்குகிறார். இதில் அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும், பிரபல ஹாலிவுட் நடிகர்கள் பலர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் முதல் திரைப்படம் என்ற பெருமை இந்த படத்திற்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் பாகுபலி தானாம். தேவசேனா அனுஷ்கா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றதும் ஹாலிவுட் நடிகர்கள் பலர் தெலுங்கு படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கோனா வெங்கட் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.