×

’அந்த நடிகர் என்னை மட்டுமல்ல, என் அம்மாவையும் சேர்த்தே அதுக்கு அழைத்தார்’…பிரபல நடிகரை அம்பலப்படுத்தும் சமூக சேவகி..

‘பி.ஜே.பி.யினரால் தரக்குறைவாக விமர்சிக்கப்படும் நடிகர் விநாயகனை ஆதரிக்கவிரும்புகிறேன். ஆனால் அதே சமயம் அவர் நிறைய பெண்களிடம் தவறாக நடந்துண்டவர் என்பதையும் இந்த சமயத்தில் அம்பலப்படுத்தியே ஆகவேண்டும்’என்கிறார் கோட்டயத்தைச் சேர்ந்த சமூக சேவகியும் கவிஞருமான மிருதுளா தேவி. ‘பி.ஜே.பி.யினரால் தரக்குறைவாக விமர்சிக்கப்படும் நடிகர் விநாயகனை ஆதரிக்கவிரும்புகிறேன். ஆனால் அதே சமயம் அவர் நிறைய பெண்களிடம் தவறாக நடந்துண்டவர் என்பதையும் இந்த சமயத்தில் அம்பலப்படுத்தியே ஆகவேண்டும்’என்கிறார் கோட்டயத்தைச் சேர்ந்த சமூக சேவகியும் கவிஞருமான மிருதுளா தேவி. மலையாளத்தில் பிரபலமானவர் நடிகர்
 

‘பி.ஜே.பி.யினரால் தரக்குறைவாக விமர்சிக்கப்படும் நடிகர் விநாயகனை ஆதரிக்கவிரும்புகிறேன். ஆனால் அதே சமயம் அவர் நிறைய பெண்களிடம் தவறாக நடந்துண்டவர் என்பதையும் இந்த சமயத்தில் அம்பலப்படுத்தியே ஆகவேண்டும்’என்கிறார் கோட்டயத்தைச் சேர்ந்த சமூக சேவகியும் கவிஞருமான மிருதுளா தேவி.

‘பி.ஜே.பி.யினரால் தரக்குறைவாக விமர்சிக்கப்படும் நடிகர் விநாயகனை ஆதரிக்கவிரும்புகிறேன். ஆனால் அதே சமயம் அவர் நிறைய பெண்களிடம் தவறாக நடந்துண்டவர் என்பதையும் இந்த சமயத்தில் அம்பலப்படுத்தியே ஆகவேண்டும்’என்கிறார் கோட்டயத்தைச் சேர்ந்த சமூக சேவகியும் கவிஞருமான மிருதுளா தேவி.

மலையாளத்தில் பிரபலமானவர் நடிகர் விநாயகன். வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர். தமிழில் இவர் விஷாலின் ’திமிரு’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் ஜுனியர் ஆர்டிஸ்டாக அறிமுகமாகி மெல்ல வளர்ந்து ’கம்மாட்டிபாடம்’படத்துக்காக கேரள அரசின் சிறந்த நடிகர் விருது வாங்கியவர்.

சமீபத்தில் இவர் பாஜகவுக்கு எதிரான கருத்தைக் கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். அதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் அவரது நிறம் மற்றும் சாதிய ரீதியாக தாக்குதலுக்கு ஆளானார்.  இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னர், தற்போது அவர் மீது மீடூ புகார் தெரிவித்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவி. 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அழைத்த போது, போனில் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது அவர் புகார் தெரிவித்துள்ளார். அப்போது, ‘என்னை மட்டுமல்லாது என்னுடைய தாயையும் அவர் விரும்பும்படி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என விநாயகன் பேசியதாக மிருதுளா கூறியுள்ளார். இத்தகவலை மிருதுளா தனது முகநூல் பக்கத்தில் பதிவாக வெளியிட, விநாயகனால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் கியூவில் நின்று அவரை அம்பலப்படுத்தி வருகிறார்கள்.