×

அதிகாரம் என்பது ஏன் எப்போதுமே ஆண்களுக்கானதாக மட்டுமே இருக்கிறதா? நயன்தாரா

தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் வோக் இதழின் அட்டைப்படத்தில் நயன் தாரா கெளரவிக்கப்பட்டுள்ளார். அந்த இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அதிகாரம் ஆண்களிடம்தான் இருக்க வேண்டுமா என குறிப்பிட்டிருக்கிறார் View this post on Instagram Celebrating the best of the South this #October2019 with our three super (cover) stars: Dulquer Salmaan
 

தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் வோக் இதழின் அட்டைப்படத்தில் நயன் தாரா கெளரவிக்கப்பட்டுள்ளார். அந்த இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அதிகாரம் ஆண்களிடம்தான் இருக்க வேண்டுமா என குறிப்பிட்டிருக்கிறார்

 

உலக அளவில் பிரபலமான வோக் இதழ், அதன் 12 ஆவது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தென்னிந்திய சினிமா கலைகளைஞர்களை கெளரவிக்கும் விதமாக இதழின் முன்பகுதியில் வளரும் பிரபல நட்சத்திரங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 

அதன்படி அட்டைப்படத்தில் மலையாளத்தில் துல்கர் சல்மான், தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் தமிழிற்காக நயன்தாராவை அட்டைப் படத்தில் வைத்துள்ளது. இவர்கள் மூவர்தான் தென்னியந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திரங்களாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையடுத்து வோக் இதழுக்கு நயன் தாரா அளித்த பேட்டியில், என்னை ஏளனமாக பார்த்தோர், நகைத்தோர் அனைவருக்கும் நான் ஒருபோதும் பதில் சொன்னதில்லை. அவர்களுக்கான சிறந்த பதில் என்னுடைய வெற்றிப் படங்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையில் வோக்கின் இந்த அட்டைப் படம் நயன்தாராவின் பதிலாக நிச்சயம் அவர்களின் காதுகளை துளைத்திருக்கும். விக்னேஷ் ஷிவனை தனது வாழ்க்கைத்துணை என குறிப்பிட்ட நயன், அதிகாரம் என்பது ஏன் எப்போதுமே ஆண்களுக்கானதாக மட்டுமே இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.