×

அட்வைஸ் பண்ணுறத விட்டுட்டு நீங்க அப்படி நடந்துக்கோங்க: நடிகர் விஜய்-யை வறுத்தெடுத்த பிரபல தியேட்டர் நிர்வாகம்!

விஜய் மற்றவர்களுக்கு உபதேசிப்பதற்கு முன்னால், அவர் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தஞ்சை ராணி தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை: விஜய் மற்றவர்களுக்கு உபதேசிப்பதற்கு முன்னால், அவர் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தஞ்சை ராணி தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி, ராதா ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சன்
 

விஜய் மற்றவர்களுக்கு உபதேசிப்பதற்கு முன்னால், அவர் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தஞ்சை ராணி தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னை: விஜய் மற்றவர்களுக்கு உபதேசிப்பதற்கு முன்னால், அவர் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தஞ்சை ராணி தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி, ராதா ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

ஏற்கனவே கதை விவகாரத்தில் சிக்கி நீதிமன்றம் வரை படம் சென்று வந்திருக்கும் நிலையில், தீபாவளிக்கு சர்கார் வெளியாக உள்ளதால் முதல் இரண்டு நாட்களுக்கு மட்டும் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 

allowfullscreen

இந்நிலையில் தஞ்சையில் உள்ள பிரபல ராணி பேரடைஸ் திரையரங்கம் நிர்வாகம், தனது முகநூல் பக்கத்தில், ‘சர்கார் படத்தின் முதல் இரண்டு நாள் டிக்கெட்களை பிளாக்கில் விற்க நாங்கள் விநியோகஸ்தர்களிடம் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. எனவே சர்கார் படத்தை திரையிடப் போவதில்லை. நல்ல முறையில் நல்ல சினிமாக்களை வெளியிடவே நாங்கள் எப்போதும் விரும்புகிறோம், நடிகர் விஜய் மற்றவர்களுக்கு உபதேசிப்பதற்கு முன்னால், அவர் அப்படி நடந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.