×

அடுத்த முதல்வர் விஜய்?

சென்னை: தமிழக அரசியல் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் ரஜினி, கமல், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். ரஜினி, கமல், விஷால் ஆகியோர் அரசியலில் ஆர்வம் காட்டி தமிழகத்தின் நலம் காக்க முதல்வராவதற்கான வழிகளுக்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் இவர்களை முந்திக் கொண்டு முதல்வர் பதவியில் அமர்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். அரசியல் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தில் தளபதி
 

சென்னை: தமிழக அரசியல் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் ரஜினி, கமல், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.

ரஜினி, கமல், விஷால் ஆகியோர் அரசியலில் ஆர்வம் காட்டி தமிழகத்தின் நலம் காக்க முதல்வராவதற்கான வழிகளுக்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் இவர்களை முந்திக் கொண்டு முதல்வர் பதவியில் அமர்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். அரசியல் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தில் தளபதி விஜய் முதல்வர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் முதல்வராக நடிப்பது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.