×

அடல்ட் காமெடி பட இயக்குநரோடு கைகோர்த்த அரவிந்த்சாமி!

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படத்தின்சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. சென்னை: சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. ‘ஹர ஹர மகாதேவகி’ என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் புதிய ட்ரெண்டை உருவாகியவர் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அதை தொடர்ந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, கஜினிகாந்த் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவரின் அடுத்த படத்தின்
 

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படத்தின்சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

சென்னை: சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. 

 ‘ஹர ஹர மகாதேவகி’ என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் புதிய ட்ரெண்டை உருவாகியவர் இயக்குநர்  சந்தோஷ் பி.ஜெயக்குமார். அதை தொடர்ந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, கஜினிகாந்த் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். 

இந்நிலையில் இவரின் அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இன்னும் பெயரிடாத இப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்கிறார். துப்பறிவு திரில்லர் படமான இதில், அரவிந்த்சாமி புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். 

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் பாலமுரளி பாலு ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் சந்தோஷ் ஜெயகுமாரின் முந்தைய படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் ஹூட்டிங் ஜூன் மாதம் துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.