×

 ‘அடப்பாவிகளா 8 ஆம் கிளாஸ் படிக்குற பொண்ண ஷூட்டிங் கூட்டிட்டு வந்துட்டாங்க’ வனிதாவை கிண்டல் செய்த தளபதி விஜய்

நடிகை வனிதா விஜயகுமார் நடிகர் விஜய்-யுடன் நடித்தது குறித்த அனுபவங்களைத் தெரிவித்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் நடிகர் விஜய்-யுடன் நடித்தது குறித்த அனுபவங்களைத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்-யுடன் சந்திர லேகா படத்தில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இதையடுத்து சில படங்களில் தோன்றிய அவர், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சண்டைக்கு பெயர் போனவர் என்ற பெயர் எடுத்ததோடு, தனது தாய்மை உணர்வையும் வெளிப்படுத்தினார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி
 

நடிகை வனிதா விஜயகுமார் நடிகர் விஜய்-யுடன் நடித்தது குறித்த அனுபவங்களைத்  தெரிவித்துள்ளார். 

நடிகை வனிதா விஜயகுமார் நடிகர் விஜய்-யுடன் நடித்தது குறித்த அனுபவங்களைத்  தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய்-யுடன் சந்திர லேகா படத்தில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இதையடுத்து சில படங்களில் தோன்றிய அவர், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சண்டைக்கு பெயர் போனவர் என்ற பெயர் எடுத்ததோடு, தனது தாய்மை உணர்வையும் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார்,   விஜய்யுடன் நடித்தது குறித்து கூறியிருந்தார். அதில், முதல் நாள் படப்பிடிப்பு முடிந்ததும் என் அம்மாவுடன் என் அறையில் இருந்தேன். அப்போது அங்கு வந்த விஜய் என்னிடம் உங்க அக்கா எங்க ? என்றார். நான் அவர் ஊரில் இருக்கிறார் என்றேன். அதற்கு அவர் அதுக்குள்ள ஊருக்கு போயிட்டாங்களா என்றார். அப்போது தான் அவர் என்னை  கேட்கிறார் என்பது தெரிந்தது. பின்னர் நான் தான் உங்களுடன் நடித்தது என்ற உண்மையை சொன்னதும், ‘என்ன கிளாஸ் படிக்குற?’ என்றார். அதற்கு நான் 8 ஆம் கிளாஸ் படிக்குற என்று சொன்னேன்.  அடப்பாவிகளா 8 ஆம் கிளாஸ் படிக்குற பொண்ண ஷூட்டிங் கூட்டிட்டு  வந்துட்டாங்க’ என்றார்.