×

அஜீத்தை விட ஒருபடி மேலே நயன்தாரா.. நயன்தாராவின் நல்ல மனசு!

ஹீரோக்களில் வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் கொடுப்பவர் அஜீத் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அஜீத் செய்கிற உதவிகள் எல்லாம், தன்னிடம் யாராவது வந்து உதவி என்று கை நீட்டிக் கேட்டால் தான் இருக்கும். அப்படி உதவி என்று கேட்பவர்களுக்கு தட்டாமல் தன்னால் முடிஞ்ச உதவிகளை நிச்சயம் செய்பவர் தான் அஜீத். பிற ஹீரோக்கள் எல்லாம், யாரையாவது பார்க்கும் போதே.. இவன் நம்ம கிட்டே ஏதாவது கேட்டுடுவானோ என்கிற பயத்திலேயே பத்தடி பின்னால் பதுங்கி
 

ஹீரோக்களில் வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் கொடுப்பவர் அஜீத் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அஜீத் செய்கிற உதவிகள் எல்லாம், தன்னிடம் யாராவது வந்து உதவி என்று கை நீட்டிக் கேட்டால் தான் இருக்கும். அப்படி உதவி என்று கேட்பவர்களுக்கு தட்டாமல் தன்னால் முடிஞ்ச உதவிகளை நிச்சயம் செய்பவர் தான் அஜீத். பிற ஹீரோக்கள் எல்லாம், யாரையாவது பார்க்கும் போதே.. இவன் நம்ம கிட்டே ஏதாவது கேட்டுடுவானோ என்கிற பயத்திலேயே பத்தடி பின்னால் பதுங்கி விடுவார்கள். ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரும் கூட இந்த ரகத்தில் தான் சேர்வார் என்பது கசப்பான உண்மை.

ஹீரோக்களில் வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் கொடுப்பவர் அஜீத் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அஜீத் செய்கிற உதவிகள் எல்லாம், தன்னிடம் யாராவது வந்து உதவி என்று கை நீட்டிக் கேட்டால் தான் இருக்கும். அப்படி உதவி என்று கேட்பவர்களுக்கு தட்டாமல் தன்னால் முடிஞ்ச உதவிகளை நிச்சயம் செய்பவர் தான் அஜீத். பிற ஹீரோக்கள் எல்லாம், யாரையாவது பார்க்கும் போதே.. இவன் நம்ம கிட்டே ஏதாவது கேட்டுடுவானோ என்கிற பயத்திலேயே பத்தடி பின்னால் பதுங்கி விடுவார்கள். ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரும் கூட இந்த ரகத்தில் தான் சேர்வார் என்பது கசப்பான உண்மை.

ஹீரோயின்களின் மென்மையான மனசைப் பற்றி சொல்லவே வேண்டாம் என்று தப்பு கணக்குப் போட்டால், இன்னும் நீங்கள் சினிமாக்காரர்களைப் புரிந்துக் கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். சினிமா, பணம் கொழிக்கும் தொழில். டச்சப் பையன்களில் ஆரம்பித்து, குடிப்பிடித்து வரும் உதவியாளர், எடுபிடி வரையில் நடிகைகளின் கூடவே வரும் அத்தனை அடிப்பொடிகளுக்கும் சம்பளம் தருவது தயாரிப்பாளர்கள் தான். சினிமாவில் முதலாளி என்பவர் தயாரிப்பாளர்கள் மட்டும் தான். அப்படி தயாரிப்பாளர் தருகிற பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, அவர்களுக்கு சொற்ப சம்பளத்தைத் தருகிற நடிகைகள் இன்னமும் திரைத்துறையில் இருக்கிறார்கள். உங்களது எல்லா கனவு கன்னிகளுமே இந்த ரகத்தில் அடங்கி விடுபவர்கள் தான்!

இதில் அப்படியே விதிவிலக்காக இருக்கிறார் நயன்தாரா… தன்னுடைய உதவியாளர்களுக்கு தன்னுடைய சம்பளத்தில் இருந்து தான் பணம் தருகிறார். ஏகப்பட்ட நல்லப் பழக்கங்களை வைத்திருக்கிற நல்ல மனசுக்கு சொந்தக்காரர் நயன்தாரா. விளம்பரங்களில் அதிகம் தோன்றுவதில்லை. தனக்கு கதைப் பிடித்து விட்டால், அதன்பிறகு இயக்குநரின் நடிகை தான். அதனால் தான் ‘அறம்’ மாதிரியான படங்களை இயக்குநர் சுதந்திரமாக எடுக்க முடிந்தது. நான் நடிகை என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் பந்தா செய்வதில்லை. அடிக்கடி கேராவேனுக்குள் ஒளிந்து கொண்டு அலம்பல்கள் செய்வதில்லை.  படத்தின் ஷூட்டிங் வரையில் எல்லோருடனும் கலகலப்பாகப் பேசுவார். அவர்கள் குடும்பங்கள், பிரச்சனைகள் என்று அந்நியோன்யமாக பேசிப் பழகுவார். படப்பிடிப்பு முடிந்ததும் உடன் வேலை செய்த அத்தனை பேருக்கும் தன்னாலான உதவிகளைச் செய்வார். நிற்க.. இதைத் தானே அஜீத் செய்வார்…?

ஆமாம்… இதைத் தான் அஜீத் செய்வார். ஆனால், நயன்தாரா.. சும்மா போகிற போக்கில் பணத்தை அள்ளி விட மாட்டார். நயன்தாரா அவர்களின் பசிக்கு மீன் கொடுப்பதில்லை. மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறார். நீண்ட காலங்களாக தன்னுடைய மேனேஜராக இருந்தவருக்கு விலையுயர்ந்த கார் பரிசளித்தார். 

‘கத்தி’ படத்தின் கதை விவகாரத்தில் கோர்ட் படியேறியும் நீதி கிடைக்காமல் நிர்கதியாய் நின்ற இயக்குநர் கோபிக்கு அட்வான்ஸுடன், கால்ஷீட் கொடுத்து ‘அறம்’ பட வாய்ப்பு கொடுத்தார். இன்று பெயர் சொல்லும் இயக்குநராக வலம் வருகிறார் ‘அறம்’ கோபி.அந்த வகையில் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனின் மேனேஜரான மயில்வாகனனை இணைத்தயாரிப்பாளராக்கி அழகு பார்த்திருக்கிறார். ஏற்கெனவே தன்னிடம் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜேஷை தயாரிப்பாளராக்கியிருக்கிறார்.  உடன் இருப்போரை உயர ஏணியில் உட்கார்த்திப் பார்க்க நல்ல மனசு வேணும்! அது நயன்தாராவுக்கு இருக்கு. அஜீத்துக்கும், நயன்தாராவுக்கும் இருக்கிற வித்தியாசம், தர்மருக்கும், கர்ணனுக்கும் இருக்கிற வித்தியாசம் தான்.. தர்மர்னு பேரை வெச்சுக்கிட்டிருந்தாலும், தர்மாவான்னு கர்ணனைத் தானே சொல்றோம்?