×

’அஜீத் மட்டும் தான் இந்திக்குப் போவாரா?’…ஷாருக் கானை ‘தளபதி 63’க்குள் விஜய் இழுத்த ரகசியம்…

‘தளபதி 63’ படத்தில் இந்தி நடிகர் ஷாருக் கான் நடிப்பது அநேகமாக உறுதியான செய்திதான் என்கிறது இயக்குநர் அட்லீயின் நெருங்கிய வட்டாரம். சென்னை : ‘தளபதி 63’ படத்தில் இந்தி நடிகர் ஷாருக் கான் நடிப்பது அநேகமாக உறுதியான செய்திதான் என்கிறது இயக்குநர் அட்லீயின் நெருங்கிய வட்டாரம். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட விளையாட்டு
 

‘தளபதி 63’ படத்தில் இந்தி நடிகர் ஷாருக் கான் நடிப்பது அநேகமாக உறுதியான செய்திதான் என்கிறது இயக்குநர் அட்லீயின் நெருங்கிய வட்டாரம்.

சென்னை :  ‘தளபதி 63’ படத்தில் இந்தி நடிகர் ஷாருக் கான் நடிப்பது அநேகமாக உறுதியான செய்திதான் என்கிறது இயக்குநர் அட்லீயின் நெருங்கிய வட்டாரம்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படமாகிறது.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக அவ்வப்போது ஒரு செய்தி நடமாடி பின்னர் தலைமறைவாகி வந்தது. பின்னர் மெர்சல் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது அட்லீ – ஷாருக்கான் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதன்மூலம் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

இந்த நிலையில், தளபதி 63’ படத்தில் ஷாருக்கான் வில்லனாக நடிப்பதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படத்தில் வில்லத்தனமான மற்றொரு கதாபாத்திரத்தில், கால்பந்து விளையாட்டுக் கழகம் ஒன்றின் தலைவராக ஜாக்கி ஷெராப் நடிக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஷாருக் கான் நடிக்கும் செய்தியை ஜாக்கி ஷெராஃப்தான் முதலில் உறுதி செய்திருக்கிறார்.

இப்படத்தில் திடீரென்று இரு முக்கிய இந்தி நடிகர்கள் நுழைக்கப்பட்டதற்குக் காரணமே விஜய் தானாம். இந்தித் தயாரிப்பாளர் போனி கபூருக்குப் படம் பண்ணிக்கொண்டிருக்கும் அஜீத் அடுத்து அவரது தயாரிப்பில் நேரடி இந்தியப்படம் நடிக்கவும் தயாராகிவிட்டார். அதையொட்டி தனது இந்தி மார்க்கெட்டை விஸ்தரிக்கும் அஜித், இனி தனது படங்களை இந்திக்கும் சேர்த்து தயாரித்து சம்பளத்தை இரட்டிப்பாக்க முடியும். 

இதைப் பார்த்துக்கொண்டு அவரது போட்டியாளர் விஜய் சும்மா இருக்கமுடியுமா…ஸோ தற்போது நடந்துகொண்டிருக்கும் படத்தையே தமிழ், இந்திப்படமாக்கிவிட்டார்

 

இதையும் வாசிக்க: இளைய தளபதி விஜய் படப்பிடிப்பு ரத்து…உயிருக்கு ஊசலாடும் எலெக்ட்ரிஷியன்!?