×

அஜித்தை கைது செய்ய வேண்டும்: வன்னி அரசு ஆவேசம் 

தல அஜித்தை கைது செய்ய வேண்டும் என்று வன்னி அரசு கடுமையாக அவசப்பட்டுள்ளார் சென்னை: தல அஜித்தை கைது செய்ய வேண்டும் என்று வன்னி அரசு கடுமையாக அவசப்பட்டுள்ளார். சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் கடந்த 10-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. பார்வையாளர்களைக் கண் கலங்க வைக்கும் செண்டிமெண்ட் காட்சி அமைந்துதிருப்பதால் குடும்பமாகச் செல்வோர்
 

தல அஜித்தை கைது செய்ய வேண்டும் என்று வன்னி அரசு கடுமையாக அவசப்பட்டுள்ளார்

சென்னை: தல அஜித்தை கைது செய்ய வேண்டும் என்று வன்னி அரசு கடுமையாக அவசப்பட்டுள்ளார். 

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் கடந்த 10-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. பார்வையாளர்களைக் கண் கலங்க வைக்கும் செண்டிமெண்ட் காட்சி அமைந்துதிருப்பதால் குடும்பமாகச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், தல அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியானதிலிருந்து நடந்த சம்பவத்தை விமர்சிக்கும் விதமாக தனியார் செய்தி தொலைக்காட்சியில் ‘விஸ்வாசம்’ வசூல் விவாதத்தில் கலந்து கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் பிரமுகர் வன்னி பேசியுள்ளார் , அவர் பேசியதாவது “ஒரு திரைப்படம் பார்க்க பணம் கொடுக்கவில்லை என்பதற்காகப் பெற்ற தந்தையையே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளார். தியேட்டரில் கத்திக்குத்து, கட் அவுட் விழுந்து காயம் போன்ற அசம்பாவித சம்பவங்களும் நடந்துள்ளது.இதுமாதிரியான சம்பவங்களுக்கு அந்த குறிப்பிட்ட நடிகரும் பொறுப்பேற்க வேண்டும். என்னை கேட்டால் இந்த வழக்குகளில் அஜித் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்.