×

அஜித்தின் தல பட்டத்தையும் சுட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்: உண்மை நிலவரம் என்ன?

நடிகர் அஜித்திற்கு சூட்டப்பட்ட தல பட்டத்தை உதவி இயக்குநர் ஒருவரிடமிருந்து காப்பியடித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பெயர் வாங்கிக் கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை: நடிகர் அஜித்திற்கு சூட்டப்பட்ட தல பட்டத்தை உதவி இயக்குநர் ஒருவரிடமிருந்து காப்பியடித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பெயர் வாங்கிக் கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சர்கார் படக்கதை விவகாரத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தீனா படத்தை ரட்சகன் படத்தின் இயக்குநர் பிரவீன்
 

நடிகர் அஜித்திற்கு சூட்டப்பட்ட தல பட்டத்தை உதவி இயக்குநர் ஒருவரிடமிருந்து காப்பியடித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பெயர் வாங்கிக் கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை: நடிகர் அஜித்திற்கு சூட்டப்பட்ட தல பட்டத்தை உதவி இயக்குநர் ஒருவரிடமிருந்து காப்பியடித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பெயர் வாங்கிக் கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சர்கார் படக்கதை விவகாரத்தைத் தொடர்ந்து  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில்   தீனா படத்தை ரட்சகன் படத்தின் இயக்குநர் பிரவீன் காந்த் இயக்க வேண்டிய படம் என்றும்,  ரட்சகன் படத்தில் உதவி இயக்குநராக இருந்த மோகன் என்பவர்தான்  தல பட்டத்தைக் கொடுத்தவர் என்றும் கூறப்படுகிறது. செல்வமணியிடம் அசோசியேட்டாக இருந்த இவர் தான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த தனது கதையில் இருக்கும் கதாபாத்திரத்திற்கு தல எனப்பெயர் வைத்திருந்தார். அதை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்பார்.  அப்படிப்பட்ட பட்டத்தையும் ஒரு உதவியாளரிடம் இருந்து தான் ஏ.ஆர்.முருகதாஸ் சுட்டிருக்கிறார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

முன்னதாக ரட்சகன், ஸ்டார் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்திடம் தான்  உதவி இயக்குநராக  ஏ.ஆர் முருகதாஸ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.