×

அஜித் படத்தில் வில்லனாக நடிக்கவேண்டும்! பிரபல நடிகர் ஓபன் டாக்!

நடிகர் அதர்வா தல அஜித் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சென்னை: நடிகர் அதர்வா தல அஜித் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதர்வா. தனது முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். கடந்த ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி
 

நடிகர் அதர்வா தல அஜித் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

சென்னை: நடிகர் அதர்வா தல அஜித் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதர்வா. தனது முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.  கடந்த ஆண்டு  வெளியான இமைக்கா நொடிகள்  திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி  மக்கள் மனதை வென்றார்.

இவர் தற்போது  ஆர்.கண்ணன் இயக்கத்தில் மேகா ஆகாஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த ‘பூமராங்’ வரும் மார்ச் 1  திரைக்கு வரவுள்ளது . இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அதர்வா பல்வேறு சுவாரஷ்யக் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அதர்வா பேட்டி ஒன்றில்,’அஜித் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவரே மிகப்பெரிய வில்லனாக மிரட்டியுள்ளார். அவர் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தால் எப்படி இருக்கும், எனவே ஒரு படத்திலாவது அவருக்கு வில்லனாக நடிக்கவேண்டும்’ என்று தனது ஆசையை கூறியுள்ளார்.