×

அஜித் படத்தின் மீது மோசடி! பிரபல தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு!

மிஸ்டர் க்ளீன் என்கிற பெயர் அன்றிலிருந்து, இப்போது வரையில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலகை சார்ந்தவர்களிடத்திலும் நடிகர் அஜித்திற்கு உண்டு. அதைப் போலவே சரியான திட்டமிடல், குறித்த நேரத்தில் சம்பளப் பட்டுவாடா என்று மிஸ்டர் க்ளீன் இமேஜ் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்கும் உண்டு. கடந்த 2017 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி, மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது அஜித் நடித்த ‘விவேகம்’ படம் . அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
 

 

மிஸ்டர் க்ளீன் என்கிற பெயர் அன்றிலிருந்து, இப்போது வரையில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலகை சார்ந்தவர்களிடத்திலும் நடிகர் அஜித்திற்கு உண்டு. அதைப் போலவே சரியான திட்டமிடல், குறித்த நேரத்தில் சம்பளப் பட்டுவாடா என்று மிஸ்டர் க்ளீன் இமேஜ் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்கும் உண்டு.

கடந்த 2017 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி, மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது அஜித் நடித்த  ‘விவேகம்’ படம் . அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சத்யா ஜோதி பிலிம்ஸின் பங்குதாரர் தியாகராஜன், விவேகம் படத்தை வெளிநாடுகளில் வெளியிட மலேஷியாவைச் சேர்ந்த ஆர்.டி.எஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.4.25 கோடி படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே பெற்றுள்ளார். 

ஆனால், அவர் பணத்தை வாங்கி கொண்டு, தான் சொன்னப்படி ஆர்.டி.எஸ் நிறுவனத்திற்கு அளிக்காமல் வேறு ஒரு நிறுவனத்திற்கு படத்தை வெளியிடுவதற்கான ஒப்புதலை அளித்து விட்டதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிளாட்டஸ் பிரெட்ரிக் ஹென்றி சென்னை எழும்பூர் நீதி மன்றத்தில் மனு அளித்தார். 

அந்த மனுவை இன்று விசாரித்த மத்திய குற்றப் பிரிவு எழும்பூர்  நீதிமன்றம், தியாகராஜன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு தீர்ப்பளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.