அசுரன் அப்டேட்: அமெரிக்காவில் எப்போது ரிலீஸ் தெரியுமா?
பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் திரைப்படம் அமெரிக்காவிலும் வெளியாகவுள்ளது.
வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணி மீண்டும் அசுரன் படம் மூலம் இணைந்துள்ளது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.
ஏற்கனவே அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வரும் 8 ஆம் தேதி வெளியாக இருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அசுரன் திரைப்படம் அமெரிக்காவிலும் வரும் 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 110 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகவுள்ளதாகவும் கூறியுள்ள நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.