×

அங்காடித் தெரு பட இயக்குநரோடு கைகோர்த்த விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் வசந்தபாலன் இயக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் வசந்தபாலன் இயக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வெயில் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் வசந்தபாலன் அங்காடித்தெரு, காவியத்தலைவன் போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். அதையடுத்து தற்போது தற்போது ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ‘ஜெயில்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் இயக்கவுள்ள
 

நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் வசந்தபாலன் இயக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் வசந்தபாலன் இயக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

வெயில் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் வசந்தபாலன் அங்காடித்தெரு, காவியத்தலைவன் போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். அதையடுத்து தற்போது தற்போது ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ‘ஜெயில்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் இயக்கவுள்ள அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கவிருக்கும்  இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.  

விஷ்ணு விஷால் தற்போது எழில் இயக்கத்தில் ஜக ஜால கில்லாடி படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: திரிஷாவுக்காக இயக்குநர் பணியை கைவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!?