×

ஃ பேமிலி ஆல்பத்தில் கெட்ட ஆட்டம் போட்ட பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரின் சகோதர்கள் உருவாக்கியுள்ள ஆல்பத்தில் நடனம் ஆடியுள்ளார் சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரின் சகோதர்கள் உருவாக்கியுள்ள ஆல்பத்தில் நடனம் ஆடியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் – நிக் ஜோனஸ்க்கு கடந்த டிசம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. நிக் ஜோனாஸின் சகோதரர்கள்,ஜோனாஸ் பிரதர்ஸ் என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டு இசைக் குழு ஒன்றை ஆரம்பித்து
 

நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரின்  சகோதர்கள்  உருவாக்கியுள்ள ஆல்பத்தில் நடனம் ஆடியுள்ளார்

சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரின்  சகோதர்கள் உருவாக்கியுள்ள ஆல்பத்தில் நடனம் ஆடியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் – நிக் ஜோனஸ்க்கு கடந்த டிசம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. நிக் ஜோனாஸின் சகோதரர்கள்,ஜோனாஸ் பிரதர்ஸ் என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டு இசைக் குழு ஒன்றை ஆரம்பித்து ஆல்பங்கள் வெளியிட்டு வந்தனர். இந்தக் குழு 2013 ஆம் ஆண்டு பிரிந்து தனித்தனியாகப் பாடி வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஆறு வருடம் கழித்து  இணைந்து ஒரே ஒரு பாடல் மட்டும் இடம்பெற்றுள்ள சக்கர்(Sucker) என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர்

இந்த நிலையில், திருமணம் முடிந்த பிறகு எதிலும் கமிட் ஆகாத நிலையில் இருந்த பிரியங்கா சோப்ரா தற்போது நிக் ஜோனாஸின் சகோதரர்கள் ஆல்பம் பாடலில் நடனம் ஆடியுள்ளார். இதில் நிக்கின் சகோதரர் ஜோ ஜோனாஸின் வருங்கால மனைவியும் ஹாலிவுட் நடிகையுமான ஷோபிடர்னர், மற்றொரு சகோதரர் கெவின் ஜோனாஸின் மனைவி டேனியல்லி என குடும்பமே இணைந்து இந்தப் பாடலில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் திரைக்கு பின்னல் என்று பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில்’ கிளாம் குளியல்,மீண்டும் ஒன்று சேர்ந்த ஜோன்ஸ் பிரதேர்ஸ் அதைத்தொடர்ந்து எப்போதும் சிறந்த கணவன்’என்று பதிவிட்டுள்ளார்.