×

#Vikram58: விஜய் சேதுபதி பட இயக்குநரோடு கைகோர்த்த சீயான் விக்ரம்!

விக்ரமின் 58வது படத்தை ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது சென்னை: விக்ரமின் 58வது படத்தை ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ‘கடாரம் கொண்டான்’. இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதேபோல் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’,
 

விக்ரமின் 58வது படத்தை ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை: விக்ரமின் 58வது படத்தை ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ‘கடாரம் கொண்டான்’. இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதேபோல் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’, ‘மகாவீர் கர்ணா’ படங்களின் படப்பிடிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் அவரின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கி, அடுத்த ஆண்டு (2020) சம்மர் கொண்டாட்டமாக ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.