×

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் நாளை ஓடிடியில் ரிலீஸ்: ஒருமுறை பார்ப்பதற்கான கட்டணம் ரூ. 199.

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் நாளை ஓடிடி-யில் வெளியாகிறது. தியேட்டர்கள் இல்லாத நிலையில் ஜீ பிளெக்ஸ் மூலம் வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம். க பெ ரணசிங்கம் திரைப்படத்தை ஒருமுறை பார்ப்பதற்கான கட்டணம் ரூ. 199. டிடிஹெச் சேவை மற்றும் ஓடிடி மூலம் முன்பதிவு செய்து இத்திரைப்படத்தை பார்க்கலாம். டாடா ஸ்கை வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் மூலம் ZP to 1800 208 6633 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பலாம். டி2ஹெச் வாடிக்கையாளர்கள் www.d2h.com அல்லது d2h infinity app மூலம்
 

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் நாளை ஓடிடி-யில் வெளியாகிறது. தியேட்டர்கள் இல்லாத நிலையில் ஜீ பிளெக்ஸ் மூலம் வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம். க பெ ரணசிங்கம் திரைப்படத்தை ஒருமுறை பார்ப்பதற்கான கட்டணம் ரூ. 199.

டிடிஹெச் சேவை மற்றும் ஓடிடி மூலம் முன்பதிவு செய்து இத்திரைப்படத்தை பார்க்கலாம். டாடா ஸ்கை வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் மூலம் ZP to 1800 208 6633 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பலாம். டி2ஹெச் வாடிக்கையாளர்கள் www.d2h.com அல்லது d2h infinity app மூலம் தொடர்பு கொள்ளலாம்.
டிஷ் டிவி வாடிக்கையாளர்கள் MY DISH TV APP அல்லது www.mydishtv.in இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜீ5 வாடிக்கையாளர்கள் ஓடிடி சேவையை ஜீ5 செயலி மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

மக்களை பெரிதும் பாதிக்கும் லஞ்சத்தை மையமாகக் கொண்ட சமூக அரசியல் திரைப்படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது என என கூறப்படுகிறது.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும், முக்கியமான பாத்திரத்தில் செய்தியாளரும் அரசியல் விமர்சகருமான ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, சமுத்திரக்கனி, வேல. ராமமூர்த்தி, பூ ராம் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டுள்ளதால் கனல் தெறிக்கும் அரசியல் சாடல்களும் இதில் உள்ளன என்கிறது படக்குழு. சமூக அநீதி, ஏழை-பணக்காரன் இடையிலான ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளையும் இது அலசுகிறது. ரணசிங்கமாக கதநாயகன் விஜய் சேதுபதி முன்னிறுத்தப்பட்டாலும் அவரது பகுதி குறைவுதான். பெரும்பாலான பகுதியை ராஜேஷ் ஐஸ்வர்யா ஆக்ரமித்துள்ளார். விஜய் சேதுபதி விட்டுச் சென்ற பணிகளை அதாவது சமூகத்துக்கு எதிரான நிகழ்வுகளை எதிர்த்துப் போராடும் பாத்திரத்தில் தொடர்கிறார் என்கிறார் இப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகும் பெ.விருமாண்டி.