×

முத்தையா முரளிதரன் வாழ்வியல் படத்தில் இருந்து விலகுகிறாரா விஜய் சேதுபதி?

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இயக்குநர் சீனுராமி, பாரதிராஜா, கவிஞர்கள் தாமரை, வைரமுத்து , சீமான், திருமுருகன் காந்தி என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் முத்தையா முரளிதரன் பயோபிக் படமான 800 இல் தொடர்ந்து நடிக்கிறேனா ? இல்லையா? என்பதை ஓரிரு நாட்களில் அறிவிப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். இதனிடையே, தன் மீது வீண்பழி சுமத்தப்படுவதாகவும், இலங்கை தமிழர்கள் சுட்டுக் கொல்லபட்ட போது தான் அதற்கு ஆதரவு அளிக்கவில்லை என முத்தையா முரளிதரன்
 

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இயக்குநர் சீனுராமி, பாரதிராஜா, கவிஞர்கள் தாமரை, வைரமுத்து , சீமான், திருமுருகன் காந்தி என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் முத்தையா முரளிதரன் பயோபிக் படமான 800 இல் தொடர்ந்து நடிக்கிறேனா ? இல்லையா? என்பதை ஓரிரு நாட்களில் அறிவிப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தன் மீது வீண்பழி சுமத்தப்படுவதாகவும், இலங்கை தமிழர்கள் சுட்டுக் கொல்லபட்ட போது தான் அதற்கு ஆதரவு அளிக்கவில்லை என முத்தையா முரளிதரன் 3 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், தமிழர்கள் என்மீது கொண்டுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையை மேற்கோள்காட்டி நடிகர் விஜய் சேதுபதி ” நன்றி.. வணக்கம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதி இவ்வாறு குறிப்பிட்டிருப்பது, 800 படத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவே தெரிகிறது. இது தொடர்பாக, விஜய் சேதுபதி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.