×

‘அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்’ : அமைச்சர் பாண்டியராஜன் வரவேற்பு!

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுவதை வரவேற்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த ஆவடி சரஸ்வதி நகரில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்ற அவரின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் கருத்துக்கு பதிலளித்தார். அதில், நடிகர் விஜய் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே அவருக்கு ஆதரவு அளிப்பதாக நேரடியாக அறிவித்தார். அப்போதைய தேர்தலில்
 

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுவதை வரவேற்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த ஆவடி சரஸ்வதி நகரில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்ற அவரின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் கருத்துக்கு பதிலளித்தார். அதில், நடிகர் விஜய் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே அவருக்கு ஆதரவு அளிப்பதாக நேரடியாக அறிவித்தார். அப்போதைய தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அதிமுகவுக்காக கடுமையாக உழைத்தனர். இதனால் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்ற எஸ்.ஏ.சியின் கருத்தை வரவேற்கிறோம்” என்றார்.

இதனிடையே 7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசுடன் போராட தயார் என மு.க.ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்த அவர், இது தேவையற்ற ஒன்று. ஸ்டாலின் போராட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்காக போராடட்டும் என்றார்