×

வெப் சீரிஸில் நடிக்கிறாரா வடிவேலு?

எலி படத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நாயகனாக நடித்திருந்த நடிகர் வடிவேலு, அதன் பிறகு கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே சிம்புதேவன் இயக்கும், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் அவர் நடிக்க இருந்தார். இயக்குநர் ஷங்கரும் லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்க இருந்த இந்தப் படத்துக்காகப் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக வடிவேலு இந்தப் படத்தில் நடிக்காமல் இழுத்தடித்தாராம். இந்த விவகாரம்
 

எலி  படத்தில்  கடந்த 2015 ஆம் ஆண்டு நாயகனாக நடித்திருந்த நடிகர் வடிவேலு, அதன் பிறகு கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே சிம்புதேவன் இயக்கும், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் அவர் நடிக்க இருந்தார். இயக்குநர் ஷங்கரும் லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்க இருந்த இந்தப் படத்துக்காகப் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக வடிவேலு இந்தப் படத்தில் நடிக்காமல் இழுத்தடித்தாராம்.

இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கம் வரை செல்லவே இன்றுவரை தமிழ் சினிமாவில் தீர்க்கமுடியாத பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது வடிவேலு நடித்து பாதியில் நிற்கும் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ விவகாரம். இதனால் வடிவேலு வேறு எந்த படத்திலும் நடிக்காமலிருந்து வந்தார். இந்நிலையில் பல்வேறு சர்ச்சைக்கு பிறகு கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறன் படத்தில் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இவருடைய நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. கடந்த சில தினங்களாக வடிவேலு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார், என்றும் கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்றும் தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக நடிகர் வடிவேலு தரப்பில் அளித்த விளக்கத்தில் “பலரும் பேட்டி கேட்கும் போது “வெப் சீரிஸில் நடிப்பீர்களா” என்று கேட்கும் போது, “கண்டிப்பாக நடிப்பேன்” என்று வடிவேலு சொன்னது உண்மைதான். ஆனால் இது தொடர்பான பேச்சுவார்த்தை எதுவுமே தொடங்கப்படவில்லை. வடிவேலு கூறிய பதிலை மட்டும் வைத்துக் கொண்டு ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு கமல் நடிக்கவுள்ள ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளது உறுதி. வேறு எதுவுமே உறுதியில்லை” என்று தெரிவித்துள்ளனர்.