×

திருடா திருடி படத்தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் திடீர் மரணம்!

விக்ரம் நடித்த கிங், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ணகாந்த். லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றியுள்ளார். தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷுக்கு திரையுலக பயணத்தில் வெற்றி படமாக இவர் கொடுத்த திருடா திருடி திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு ஆல்டைம் பேவரைட்.இப்படி பல
 

விக்ரம் நடித்த கிங், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ணகாந்த். லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றியுள்ளார்.

தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷுக்கு திரையுலக பயணத்தில் வெற்றி படமாக இவர் கொடுத்த திருடா திருடி திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு ஆல்டைம் பேவரைட்.இப்படி பல வெற்றி படங்களின் மூலம் திரையுலகில் கிங்காக இருந்து வந்த கிருஷ்ணகாந்த் ஒருகட்டத்தில் இறங்குமுகத்தை சந்திக்க தொடங்கினார்.

இந்நிலையில் தொழில்முறையில் நஷ்டம் அடைய தொடங்கியதால் மனஉளைச்சலில் இருந்து வந்த தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் மரணமடைந்தார்.அவரது மறைவுக்கு திரையுலக நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.