×

“The Wall” ஷோ உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க நாங்கள் பணம் கேட்பதில்லை : ஸ்டார் விஜய் டிவியின் பரபரப்பு பதிவு!

ரியாலிட்டி ஷோவுக்காக பெயர் போன இந்த டிவியில் நடன நிகழ்ச்சிகளும், கேம் ஷோக்களும், பல சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தமிழ் சேனல்களில் மிக பிரபலமான சேனல் ஸ்டார் விஜய் டிவி. ரியாலிட்டி ஷோவுக்காக பெயர் போன இந்த டிவியில் நடன நிகழ்ச்சிகளும், கேம் ஷோக்களும், பல சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாய் இந்தியாவிலேயே முதல் முறையாக “The Wall” என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. அதனை விஜே பிரியங்கா மற்றும் மா.கா.ப ஆனந்த் தொகுத்து
 

ரியாலிட்டி ஷோவுக்காக பெயர் போன இந்த டிவியில் நடன நிகழ்ச்சிகளும், கேம் ஷோக்களும், பல சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

தமிழ் சேனல்களில் மிக பிரபலமான சேனல் ஸ்டார் விஜய் டிவி. ரியாலிட்டி ஷோவுக்காக பெயர் போன இந்த டிவியில் நடன நிகழ்ச்சிகளும், கேம் ஷோக்களும், பல சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாய் இந்தியாவிலேயே முதல் முறையாக “The Wall” என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. அதனை விஜே பிரியங்கா மற்றும் மா.கா.ப ஆனந்த் தொகுத்து வழங்கி வருகின்றனர். “The Wall” மூலம் விளையாடி பணத்தை வென்று செல்லலாம் என்னும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் ஆடிஷன் ( நேர்முகத் தேர்வு) மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த ‘தி வால்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு கும்பல் பணம் மற்றும் புகைப்படங்களைக் கேட்பதாகவும் தனி நபரின் தகவல்களைக் கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளித்து ஸ்டார் விஜய் நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

அந்த பதிவில் ” “The Wall” நிகழ்ச்சி மற்றும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்காக ஏஷியாநெட் ஸ்டார் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (” ஸ்டார் விஜய்”) பணம் கேட்பதில்லை, மேலும் எந்த ஒரு நபர்(கள் ) மற்றும்/அல்லது அமைப்பு/குழுக்களையோ “The Wall ” நிகழ்ச்சியில் தோன்றுவதற்காகப் பணம் செலுத்தி வாய்ப்புகளை வழங்கவோ/செயல்படுத்தவோ நாங்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை.

 ஸ்டார் விஜய் பெயரைப் பயன்படுத்தி வரும் இத்தகைய பொய்யான சலுகைகள் மற்றும் அழைப்புகளிலிருந்தும் மற்றும்/அல்லது ஸ்டார் விஜய் பெயரைப் பயன்படுத்தித் தனி நபர் தகவல்கள், புகைப்படங்கள் அல்லது பணம் கோருவது போன்றவற்றிலிருந்தும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தகைய துஷ்டர்கள்/நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் தனி நபர் தகவல்களைப் பகிர்வதற்கும் அல்லது பணம் செலுத்துவதற்கும் ஸ்டார் விஜய் எந்த ஒரு விதத்திலும் பொறுப்புடையது ஆகாது.” என்று குறிப்பிட்டுள்ளது. 

allowfullscreen