×

‘இரண்டாம் குத்து’ படத்தின் போஸ்டரை பார்க்கவே கூசுகிறது : இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம்!

இரண்டாம் குத்து படத்திற்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சினிமா வாழ்க்கை முறையை சொல்லலாம் தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத்தெருவில் வைப்பது எந்த விதத்தில் சரி? நான் கலாச்சார சீர்கேடு என கூறும் நபர் அல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பையும் விழுந்து ரசிப்பவன். ஆனால் இரண்டாம்
 

இரண்டாம் குத்து படத்திற்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சினிமா வாழ்க்கை முறையை சொல்லலாம் தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத்தெருவில் வைப்பது எந்த விதத்தில் சரி? நான் கலாச்சார சீர்கேடு என கூறும் நபர் அல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பையும் விழுந்து ரசிப்பவன். ஆனால் இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்களால் பார்க்கவே கூசினேன்.

தமிழ்நாட்டில் உள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசி இருக்கும்? எத்தனை வளர் இளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும். கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை போதிக்கவா முன்வந்தோம். இதையெல்லாம் அனுமதி இன்றி வெளியிட கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது. நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறிவார்களோ என்று கவலை கொள்கிறேன்.

இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா? அவர்கள் இதை கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ, நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற வகையில் கண்டிப்பேன். இப்படி ஒரு ஆபாசம் தமிழ் திரை உலகிற்கு ஆகாது என கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்குப்பிடி வேண்டும் என அரசையும், சென்சார் போர்ட்டையும் வலியுறுத்துகிறேன். சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் படத்தை அரங்கேற்றாதீர்கள். எத்தனை கற்பழிப்புகள்? குழந்தை சிதைவுகள் போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளை சாப்பாட்டு தட்டில் வைக்கின்றன என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷாரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்

முன்னதாக சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் 2 ஆம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. அடல்ட் திரைபடமான இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.