×

ஓடிடியில் வெளியாகிறது வாணி போஜனின் லாக்கப்!

மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் வாணி போஜன். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் வாணி போஜன். Tamil Film #Lockup starring @actor_vaibhav @vp_offl @vanibhojanoffl opts for a Direct OTT release skipping Theatres. Streaming rights bagged by Zee5. Due for release in
 

மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் வாணி போஜன். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் வாணி போஜன்.

இந்நிலையில் அண்மையில் நிதின் சத்யா தயாரிப்பில், புதுமுகம் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ள லாக்கப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் வாணி போஜன். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் பிரபல இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் மார்ச் மாதமே நிறைவடைந்த நிலையில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஓடிடியில் படத்தை ரீலிஸ் செய்ய படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து ஜூலை மாதம் Zee5 – இல் லாக்கப் திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.