×

கொரோனாவிலிருந்து குணமடைந்த நடிகை தமன்னா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருகிறார். அண்மையில் ஓடிடி தளங்களில் வெப் சீரிஸில் பயங்கர பிசியாக நடித்துவரும் தமன்னா, அதற்கான படப்பிடிப்புகளுக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது, அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடித்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருகு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள தனியார்
 

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருகிறார். அண்மையில் ஓடிடி தளங்களில் வெப் சீரிஸில் பயங்கர பிசியாக நடித்துவரும் தமன்னா, அதற்கான படப்பிடிப்புகளுக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது, அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடித்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருகு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமன்னா விரைவாக குணமடைய நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகை தமன்னா தற்போது கொரோனாவிலிருந்து குணமடைந்தததாகவும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். தற்போது உடல்நலம் சீராக இருப்பதாகவும், தனக்காக பிரார்த்தனை தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்றும் தமன்னா தெரிவித்துள்ளார்.