×

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு உதவி செய்ய முன்வந்த நடிகர் சூரி!

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் தவசி. பெரிய மீசையும், தாடியும், குரலும் தான் அவரின் நடிப்பு அடையாளம். “கருப்பன் குசும்புக்காரன்” என்ற வசனத்தின் மூலம் பிரபலமான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கடும் ஏழ்மையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் தவித்துவரும் தவசி, தன்னுடைய சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். நமது டாப் தமிழ் நியூஸ் யூடியூப் மற்றும் இணையதளத்திலும்
 

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் தவசி. பெரிய மீசையும், தாடியும், குரலும் தான் அவரின் நடிப்பு அடையாளம். “கருப்பன் குசும்புக்காரன்” என்ற வசனத்தின் மூலம் பிரபலமான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கடும் ஏழ்மையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் தவித்துவரும் தவசி, தன்னுடைய சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

நமது டாப் தமிழ் நியூஸ் யூடியூப் மற்றும் இணையதளத்திலும் இதுகுறித்த செய்தியை பகிர்ந்து அவருக்கு உதவி செய்யுமாறு அவருடைய தொடர்பு எண்ணுடன் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இந்நிலையில் நடிகர் தவசிக்கு முதல்கட்டமாக 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தவசி மற்றும் உடனிருக்கும் உதவியாளருக்கு 3 வேளை உணவு வழங்கப்படும் என்றும், நடிகர் தவசிக்கு தேவைப்படும் அடுத்தடுத்த உதவிகளை தயாராக இருக்கிறேன் என்றும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.