×

SK17 – ஐ இயக்கப்போவது யார் ? – சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வெளியான அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சிவா காட்டில் மழை விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு எடுத்துக்காட்டாக விடாமல் முயற்சி செய்து வெற்றி பெற்றிருப்பவர் நடிகர் சிவகார்த்தியன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று அனைவராலும் விரும்பப்படும் நாயகனாக இருக்கும் சிவாவின் வளர்ச்சியைக் கண்டு திரைத்துறையில் இருப்பவர்களே ஆச்சரியப்படுகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு
 

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சிவா காட்டில் மழை 

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு எடுத்துக்காட்டாக விடாமல் முயற்சி செய்து வெற்றி பெற்றிருப்பவர் நடிகர் சிவகார்த்தியன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று அனைவராலும் விரும்பப்படும் நாயகனாக இருக்கும் சிவாவின் வளர்ச்சியைக் கண்டு  திரைத்துறையில் இருப்பவர்களே ஆச்சரியப்படுகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை  ஒரு படம் வெளியான பின்பு அதன் வெற்றி தோல்வியைப் பொறுத்தே அடுத்தடுத்த படங்களில் நடிப்பதை  வழக்கமாக வைத்திருந்தார் சிவகார்த்திகேயன்.

ஆனால், தற்போது நிலைமையே வேறு. குறைந்தபட்சமாக போட்ட பணத்தையாவது சிவா படங்கள் எடுத்து விடும் என்ற நம்பிக்கையில் ( இதைத் திரைத்துறையில் மினிமம் கேரண்டி என்பார்கள்.) அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தொடர்ந்து ஆர்வம் காட்டுகின்றனர். சிவகார்த்திகேயனும் அதற்கு தகுந்தாற்போல கதைகளைத் தான் தேர்ந்தெடுக்கிறார்.

17 -ஆவது படம் 

தற்போது, நேற்று இன்று நாளை திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் திரைப்படம், இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர். லோக்கல், இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ திரைப்படம், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் திரைப்படம்  என்று தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் சிவா. இதில் மிஸ்டர். லோக்கல் மே 1 -ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 17 – ஆவது படமான SK17 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்க வரும் ஜூலை மதம் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2020-இல் வெளியாக இருக்கிறது SK17.