×

‘பொதுமக்கள் அஞ்லிக்காக.. எஸ்.பி.பியின் உடல்’ நாளை நல்லடக்கம்!

இசை ஜாம்பவான் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பல்வேறு மொழிகளில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரது மனதிலும் நீங்கா இடம் பிடித்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று பிற்பகல் 1 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். பாடும் நிலா என செல்லமாக அழைக்கப்பட்ட எஸ்.பி.பி, இசை உலகில் நீங்கா வெற்றிடத்தை அளித்துவிட்டு சென்று விட்டார். இனி அவரை எப்போது பார்ப்போம், அவரது இனிமையான குரல்
 

இசை ஜாம்பவான் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

பல்வேறு மொழிகளில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரது மனதிலும் நீங்கா இடம் பிடித்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று பிற்பகல் 1 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். பாடும் நிலா என செல்லமாக அழைக்கப்பட்ட எஸ்.பி.பி, இசை உலகில் நீங்கா வெற்றிடத்தை அளித்துவிட்டு சென்று விட்டார். இனி அவரை எப்போது பார்ப்போம், அவரது இனிமையான குரல் எப்போது கேட்போம், புன்னகை பூத்த அவரது சிரிப்பை எப்போது பார்ப்போம் என எண்ணி ஒவ்வொரு உள்ளங்களும் கனக்கிறது.

மண்ணுலகில் பாடியது போதும் விண்ணுலகில் பாட வா என இறைவன் அவரை அழைத்து சென்று விட்டார் என திரை பிரபலங்களும், இசை உலகில் யாராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அரசியல் தலைவர்களும் எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடல், சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் எஸ்பிபியின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் உறவினர்களின் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டு, நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி நம்மை விட்டு மறைந்தாலும், அவரது நினைவலைகள் என்றென்றும் நம்முடன்..