×

மறைந்தார் பாடகர் எஸ்பிபி : இறுதி சடங்கு விவரம் உள்ளே!

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு உயிரிழந்தார். ஆகஸ்டு 14 ஆம் தேதியிலிருந்து நிமோனியா காய்ச்சல் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் அவரின் இதய – சுவாச மண்டல செயலிழப்பு ஏற்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. .55
 

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு உயிரிழந்தார். ஆகஸ்டு 14 ஆம் தேதியிலிருந்து நிமோனியா காய்ச்சல் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் அவரின் இதய – சுவாச மண்டல செயலிழப்பு ஏற்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

.55 ஆண்டுகள் திரை இசையில் சுமார் 42 ஆயிரம் பாடல்கள், பல ஆயிரம் மேடைக் கச்சேரிகள் சாதனை புரிந்துள்ளார் எஸ்பிபி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என சுமார் 16 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார் .

இந்நிலையில் எஸ்.பி.பி இறுதி சடங்கு விவரம் தற்போது தெரியவந்துள்ளது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தற்போது அவரது உடலை கொண்டு செல்ல மருத்துவமனையில் கண்ணாடி ஆம்புலன்ஸ் தயாராகவுள்ளது. இதையடுத்து செங்குன்றம் தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அவரது இறுதிச்சடங்கிற்காக பணிகள் நடைபெறவுள்ளது. அங்கு அவருக்கு சமாதி கட்ட புல்டோசர் வைத்து இடத்தை சமன் செய்து வருகின்றனர்.பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின் நாளை அவரின் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.