×

இந்திய அளவில் முதலிடம் பிடித்த ‘ஜெய்பீம்’.. கூகுளில் அதிகம் தேடிய ரசிகர்கள்...

 

சூர்யா நடிப்பில்  ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஜெய்பீம்’. போலீஸ் நிலையத்தில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட ராஜாக்கண்ணு என்பவரை பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகியிருந்தது. காட்சிகள் ஒவ்வொன்றும் காண்போரின் கண்களில் நீரை வரவழைக்கும் வகையில் இருந்தது.

இதில் சூர்யா பழங்குடி மக்களுக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார். பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜோ மோல் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில்  கதாப்பத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர்.  ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட  சமூகத்தை குறிப்பிடும் படியான காட்சிகள் இருப்பதாகக் கூறி சர்ச்சைகளும்,  எதிர்ப்புகளும் கிளம்பின.   இந்த படத்துக்கு விருதுகள் வழங்க கூடாது என்று மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கடிதமும் அனுப்பப்பட்டு உள்ளது.

இருப்பினும் கோல்டன் குளோப் விருதுக்கு ஜெய்பீம் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் ஜெய் பீம் முதலிடம் பிடித்துள்ளது. பிரபல தேடுதளமாக கூகுள் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் அதிகம் தேடப்பட்ட படமான சூர்யாவின் ‘ஜெய்பீம்’  முதலிடம் பிடித்துள்ளது.