×

எஸ்பிபி மறைவு : ரசிகர்களுக்கும் அஞ்சலி செலுத்த அனுமதி!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதால் தாமரைப்பாக்கத்தில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி-யின் உடல் காலை 11 மணி மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இருப்பினும் காவல்துறையினர் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி மறுத்து வந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள்
 

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதால் தாமரைப்பாக்கத்தில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி-யின் உடல் காலை 11 மணி மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இருப்பினும் காவல்துறையினர் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி மறுத்து வந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து பொதுமக்கள் தற்போது 5 ஐந்து நபர்களாக அவருக்கு அஞ்சலி செலுத்த அனுப்பி வைத்து வருகின்றனர். சமூக விலகலை கடைபிடித்தும், அஞ்சலி செலுத்த வரும் அனைவருக்கும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து மஞ்சள் சேர்த்து அனுப்பி வைத்து வருகின்றனர்.

இதனிடையே வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்தையும் தேர்வு செய்து அந்த இடத்தை போலீசார் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.