×

கதாநாயகனாக நடிக்க மறுத்த எஸ்.பி.பி – 285 நாட்கள் ஓடிய ’கேளடி கண்மணி’

இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த வசந்த், தனது முதல் படமாக 1990 கேளடி கண்மணி படத்தை தொடங்கினார். அந்த படத்தின் கதாநாயகன் எஸ்.பி.பி.புதுமுக இயக்குநர்கள் ஹீரோக்களை வைத்து கதை செய்வார்கள் ஆனால் , எஸ்.பி.பி க்காக பொருத்தமான கதையை செய்தார் வசந்த். தன்னை வைத்து அறிமுக இயக்குநர் ஒருவர் முதல் படம் இயக்குவதில் எஸ்.பி.பிக்கு உடன்பாடில்லை. தன்னை வைத்து இயக்கும் படம் தோல்வியடைந்தால், தனக்கு எந்த இழப்பும் இல்லை, ஆனால் முதல் படம் இயக்கும் இளம்
 

இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த வசந்த், தனது முதல் படமாக 1990 கேளடி கண்மணி படத்தை தொடங்கினார். அந்த படத்தின் கதாநாயகன் எஸ்.பி.பி.
புதுமுக இயக்குநர்கள் ஹீரோக்களை வைத்து கதை செய்வார்கள் ஆனால் , எஸ்.பி.பி க்காக பொருத்தமான கதையை செய்தார் வசந்த். தன்னை வைத்து அறிமுக இயக்குநர் ஒருவர் முதல் படம் இயக்குவதில் எஸ்.பி.பிக்கு உடன்பாடில்லை.

தன்னை வைத்து இயக்கும் படம் தோல்வியடைந்தால், தனக்கு எந்த இழப்பும் இல்லை, ஆனால் முதல் படம் இயக்கும் இளம் இயக்குநருக்கு அதுவே பெரும் தடையாக மாறி விடும் என நினைத்தார். அதை வசந்த்திடம் வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், வசந்த் விடாப்பிடியாக நின்று, எஸ்.பி.பியிடம் சம்மதம் பெற்று விட்டார். அந்த படம் வெளியாகி 285 நாட்கள் வரை வெற்றிகரமாக ஓடியது. பாடும் திறமையுள்ள ஒருவர் மனைவியை இழந்த கதை அது.

அந்த படத்துக்கு பின்னணி இசை அமைக்க இளையராஜா அதிக நாட்கள் எடுத்துக் கொண்டாராம். முக்கியமாக அந்த படத்துக்காக மூச்சு விடாமல் பாடும் பாடலை எஸ்.பி.பி பாடியிருப்பார். அதன் பின்னர் அப்படி ஒரு முயற்சியை யாரும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பாடல் முழுவதையும் மூச்சுவிடாமல் பாடவேண்டும் என்றாராம் இளையராஜா, அதெல்லாம் முடியாது வாய்ப்பே இல்லை என மறுத்த எஸ்.பி.பி 40 விநாடிகள் மூச்சு விடாமல் பாடிய பாடல்தான் ”மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ” பாடல்.

கேளடி கண்மணி மூலம் இயக்குநர் வசந்த்க்கு சிறந்த பெயர் வாங்கிக் கொடுத்ததுடன், அழியாத பாடலையும் அளித்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.