×

ஃபேஸ்புக்கில் டாக்குமெண்ட்ரி படங்கள் திரையிடல்! முன்னெடுக்கும் சாகித்ய அகாடமி

ஃபேஸ்புக்கில் ஆவணப்படங்களைத் திரையிடும் நிகழ்ச்சியின் திட்டத்தை வெளியிட்டிருக்கிறது சாகித்ய அகாடமி. சாகித்ய அகாடமி எனும் அமைப்பை மத்திய அரசு 1954 –ம் ஆண்டு தொடங்கியது. இதன் நோக்கம் இந்திய பண்பாட்டு, இலக்கியம் உள்ளிட்ட விஷயங்களை மக்களிடம் பரவலாகக் கொண்டுச்செல்வதே. சாகித்ய அகடாமி ஒவ்வோர் ஆண்டும் இந்திய மொழிகள் அனைத்திலும் மிகச் சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுத்து அதற்கு விருது அளித்து கெளரவப்படுத்தி வருகிறது. சென்ற ஆண்டில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் எனும் நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது
 

ஃபேஸ்புக்கில் ஆவணப்படங்களைத் திரையிடும் நிகழ்ச்சியின் திட்டத்தை வெளியிட்டிருக்கிறது சாகித்ய அகாடமி.

சாகித்ய அகாடமி எனும் அமைப்பை மத்திய அரசு 1954 –ம் ஆண்டு தொடங்கியது. இதன் நோக்கம் இந்திய பண்பாட்டு, இலக்கியம் உள்ளிட்ட விஷயங்களை மக்களிடம் பரவலாகக் கொண்டுச்செல்வதே.

சாகித்ய அகடாமி ஒவ்வோர் ஆண்டும் இந்திய மொழிகள் அனைத்திலும் மிகச் சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுத்து அதற்கு விருது அளித்து கெளரவப்படுத்தி வருகிறது. சென்ற ஆண்டில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் எனும் நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது அளித்தது. அதேபோல சிறுவர் இலக்கியத்திற்கு பாலபுரஸ்கர், இளைஞர்களுக்கு யுவபுரஸ்கர் விருதுகள் அளிக்கிறது.

இலக்கியம் மட்டுமல்லாது திரைப்படம் சார்ந்த ஆரோக்கியமான விஷயங்களையும் முன்னெடுக்கிறது சாகித்ய அகாடமி. அதற்காக அவ்வப்போது ஃபிலிம் ஃபெஸ்டிவல்களை நடத்தும். இப்போது கொரோனா நோய்த் தொற்றால் நாடே முடங்கி இருக்கும் இந்த நேரத்தில் ஃபேஸ்புக்கில் ஆவணப்படங்களைத் திரையிடும் ‘டர்பன் டாக்மெண்ட்ரிஸ் ஃபெஸ்டிவலை நடத்துகிறது.

ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை நடக்கும் இந்த ஆவணப் பட விழாவில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு ஃபேஸ்புக்கில் படங்கள் ஒளிப்பரப்படும். மொத்தம் 7 ஆவணப்படங்கள். இந்தியாவின் மிகப்பெரிய எழுத்தாளார்களைப் பற்றிய படங்கள். 2-ம் தேதி கிரிஷ் கார்னெட், 3-ம் தேதி ரேவா பிரசாத், 4-ம் தேதி நாராயண ரெட்டி, 5-ம் தேதி மஞ்சு போர்ஹ், 6-ம் தேதி நய்யர் மசூத், 7-ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பொன்னீலன், இறுதி நாளான 8-ம் தேதி பிஷ்காம் சஹ்னியின் ஆவணப்படங்களும் திரைப்பட விருக்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த பொன்னீலன் சாகித்ய விருது பெற்றவர். அவரைப் பற்றிய ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் மீரான் மைதீன்.