×

‘திரும்பவும் அந்த பழைய மீசையை பாக்கணும்’ – தவசிக்கு நம்பிக்கை கொடுத்த ரோபோ சங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முறுக்கு மீசையுடன், சூரிக்கு அப்பா கேரக்டரில் நடித்தவர் நடிகர் தவசி. அந்த படத்தில் “கருப்பன் குசும்புக்காரன்” என அவர் பேசிய டயலாக் மிகவும் ட்ரெண்டானது. சுமார் 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தவசி தற்போது கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உடல் மெலிந்த நிலையில், எலும்பும் தோலுமாக சிகிச்சைக்கு பண உதவி கேட்பது போல இணையத்தில் வெளியான தவசியின் புகைப்படம் ஒன்று பலரையும் அதிர்ச்சி அடையச்
 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முறுக்கு மீசையுடன், சூரிக்கு அப்பா கேரக்டரில் நடித்தவர் நடிகர் தவசி. அந்த படத்தில் “கருப்பன் குசும்புக்காரன்” என அவர் பேசிய டயலாக் மிகவும் ட்ரெண்டானது. சுமார் 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தவசி தற்போது கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல் மெலிந்த நிலையில், எலும்பும் தோலுமாக சிகிச்சைக்கு பண உதவி கேட்பது போல இணையத்தில் வெளியான தவசியின் புகைப்படம் ஒன்று பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அதனால் அவருக்கு சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பண உதவி அளித்தனர். இந்த நிலையில், நடிகர் ரோபோ சங்கர் மதுரைக்கு சென்று தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தவசிக்கு சிகிச்சைக்காக பணம் கொடுத்த ரோபோ சங்கர், உங்களோட அந்த பழைய மீசையை திரும்ப பாக்கணும் என உருக்கத்துடன் கூறியதும் தவசி, நான் மீண்டு வருவேன் என சொன்ன வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.