×

ஷ்ரேயாஸ் ஈடி (ShreyasET)யில் வெளியாகும் ராம் கோபால் வர்மா படம்!!

கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இயக்குனர் ராம் கோபால் வர்மா ‘க்ளைமேக்ஸ்’ என்றொரு படத்தை ShreyasET தளத்தின் மூலம் நேரடி டிஜிட்டல் ரிலீஸாக வெளியிட்டார். தற்போது‘நேக்டு நங்கா நக்னம்’ என்ற மற்றொரு படத்தை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். க்ளைமேக்ஸ் படம் வெளியான 12 மணி நேரத்தில் ATTதளத்திற்கு 2,75,000 லாகின்களும், 1,68,596 கட்டணம் செலுத்திய பார்வைகளும் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்தமாக 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது
 

கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இயக்குனர் ராம் கோபால் வர்மா ‘க்ளைமேக்ஸ்’ என்றொரு படத்தை ShreyasET தளத்தின் மூலம் நேரடி டிஜிட்டல் ரிலீஸாக வெளியிட்டார். தற்போது‘நேக்டு நங்கா நக்னம்’ என்ற மற்றொரு படத்தை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். க்ளைமேக்ஸ் படம் வெளியான 12 மணி நேரத்தில் ATTதளத்திற்கு 2,75,000 லாகின்களும், 1,68,596 கட்டணம் செலுத்திய பார்வைகளும் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்தமாக 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது அடுத்தப்படமான ‘நேக்டு நங்கா நக்னம்’ என்ற படத்தை நாளை வெளியிடவுள்ளார். இதேபோல் 302, சிவன் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களும் ShreyasET தளத்தில் நேரடியாக வெளியிடப்படவுள்ளன. இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படுகிறது. நயன்தாரா நடிக்கும் தமிழ் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பும் நேரடியாக ஷ்ரேயாஸ் ஈடியின் மூலம் வெளியாகவுள்ளது.