×

மூக்குத்தி அம்மன் படத்தில் திருப்பதி பிரசாதத்தை கேலி செய்ததால் வெடித்த சர்ச்சை!

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என். ஜே. சரவணன் ஆகியோரது கூட்டு இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேபோல் இந்து அமைப்பினர் அந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் படம் வெற்றியடைந்துள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மதத்தை வைத்து போலி சாமியர்கள் செய்யும் காரியங்களை தோலூரித்து காட்டும் விதமாக இந்த படம் வெளியானது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தில் திருப்பதி பிரசாதத்தை கேலி செய்த, பட
 

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என். ஜே. சரவணன் ஆகியோரது கூட்டு இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேபோல் இந்து அமைப்பினர் அந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் படம் வெற்றியடைந்துள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மதத்தை வைத்து போலி சாமியர்கள் செய்யும் காரியங்களை தோலூரித்து காட்டும் விதமாக இந்த படம் வெளியானது.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தில் திருப்பதி பிரசாதத்தை கேலி செய்த, பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷை, திருப்பதி தேவஸ்தான கமிட்டியில் இருந்து நீக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார். மேலும் படக்குழுவினர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் காடேஷ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் வெளியான, ‘மூக்குத்தி அம்மன்’ சினிமாவில், இந்து மத பெரியோர்களையும், மத நம்பிக்கைகளையும் கேலி செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.கோவிலுக்கு பிரசாதம் வாங்குவதற்கு மட்டுமே பக்தர்கள் செல்வது போலவும், திருப்பதி செல்வோர் லட்டுக்காக மட்டுமே செல்வது போலவும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், திருப்பதி தேவஸ்தான கமிட்டி உறுப்பினராக உள்ளார். அவர் தயாரித்த அந்த படத்தில், திருப்பதி கோவிலை கேலி செய்த காட்சி இடம் பெற்றிருப்பது இந்து மத நம்பிக்கையை குலைப்பது போல் உள்ளது.

குறிப்பாக, ஒரு தரப்பாகவும், இந்து மதத்தினரை மதமாற்றம் செய்ய துாண்டுவது போன்றும் உள்ளது. இதனால், அவரை கோவில் கமிட்டி பொறுப்பிலிருந்து விலக்க வேண்டும். இது குறித்து, நடவடிக்கை எடுக்காவிடில், போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார்.