×

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநரை நியமனம் செய்தது பாராட்டத்தக்கது : ரஜினிகாந்த் கடிதம்!

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக சென்னை, தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பேராசிரியர் ஆர். சந்திரசேகரன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நியமிக்கபட்டார். இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் உறுதி செய்தார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்த நிலையில் ராமதாஸ் உள்ளிட்டோர் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக உதவிப் பேராசிரியர் நிலையிலுள்ள ஒருவர் அயல்பணி முறையில் நியமிக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல. இது செம்மொழி தமிழாய்வு
 

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக சென்னை, தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பேராசிரியர் ஆர். சந்திரசேகரன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நியமிக்கபட்டார். இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் உறுதி செய்தார்.

இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்த நிலையில் ராமதாஸ் உள்ளிட்டோர் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக உதவிப் பேராசிரியர் நிலையிலுள்ள ஒருவர் அயல்பணி முறையில் நியமிக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல. இது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தமிழாராய்ச்சியை ஊக்குவிக்க எந்த வகையிலும் உதவாது என்று கருத்து தெரிவித்தனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுதியுள்ள கடிதத்தில், ‘ செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநரை நியமனம் செய்தது பாராட்டத்தக்கது ‘ என்று கூறியுள்ளார்.