×

“அரசியலுக்கு வரலன்னா தற்கொலை பண்ணிக்குவேன்” : ரஜினிக்கு மிரட்டல் விடுத்த மக்கள் மன்ற நிர்வாகி!

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகி மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் 90 காலகட்டங்களில் இருந்தே தான் அரசியலுக்கு வருவதை தனது திரைப்படங்கள் மூலம் தெரிவித்த வண்ணம் இருந்தார். இதனால் அவரது படங்கள் ஓடியதே தவிர அவர் அரசியலுக்கு வந்த பாடில்லை. ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்ற மிகப்பெரிய கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு
 

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகி மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் 90 காலகட்டங்களில் இருந்தே தான் அரசியலுக்கு வருவதை தனது திரைப்படங்கள் மூலம் தெரிவித்த வண்ணம் இருந்தார். இதனால் அவரது படங்கள் ஓடியதே தவிர அவர் அரசியலுக்கு வந்த பாடில்லை. ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்ற மிகப்பெரிய கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதில் தனது கி இலக்கு சட்டமன்ற தேர்தலில் தான் என்று கூறிய ரஜினி அதற்கான ஆயத்தப் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக , அதிமுக போன்றவை தங்களது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர் . இருப்பினும் ரஜினியிடமிருந்து அறிவிப்பு வரும் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் தனது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிவுரை கூறி உள்ளதால் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, தான் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள மாட்டேன். உடல் நலத்தை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வர போவதில்லை என்பது போன்றும் கூறப்பட்டிருந்தது. இது தன்னுடைய அறிக்கை இல்லை என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த் அதில் தனது உடல்நிலை குறித்து கூறி இருப்பது உண்மைதான் என்று தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் நேற்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் சுமார் 2 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் விரைவில் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன் என்று வழக்கம் போல் கூறிவிட்டு சென்றார்.

பல ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவாரா?மாட்டாரா? என்ற குழப்பத்தில் உள்ள அவரது ரசிகர்கள் கிட்டத்தட்ட மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில் , பட்டுக்கோட்டை ஒன்றியம் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சத்தியமூர்த்தி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மக்கள் தலைவர் நடத்திய கூட்டத்தில் அரசியலுக்கு வரமாட்டார் என்ற சூழ்நிலை நிலவுகிறது. நாளை தெரியும். அவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்ய உள்ளேன் என்று பதிவிட்டு இருந்தார். ரஜினிக்கு ரசிகர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தது ரஜினி மக்கள் மன்றத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சத்தியமூர்த்தி மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவரும் மன்னிக்கவும் . மன உளைச்சலால் இந்த பதிவினை போட்டுவிட்டேன். தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் அண்ணன் என்னிடத்தில் தலைவர் நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார். களப்பணி செய்தவருக்கு தான் அந்த வலி தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.