×

போயஸ் இல்லத்தில் ரஜினி – கமல் திடீர் சந்திப்பு : ஆதரவு கேட்க சென்றதாக தகவல்!

சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் கமல் ஹாசன் திடீர் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ரஜினி வீடு திரும்பினார். அத்துடன் அரசியலில் முழு மூச்சாக களமிறங்க இருந்த ரஜினி, உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்
 

சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் கமல் ஹாசன் திடீர் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ரஜினி வீடு திரும்பினார். அத்துடன் அரசியலில் முழு மூச்சாக களமிறங்க இருந்த ரஜினி, உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் திடீரென சந்தித்தார். உடல்நல குறைவால் கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருக்கும் நடிகர் ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார் கமல் ஹாசன். நட்பு ரீதியாக ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கமல் ஹாசன் கேட்டு தெரிந்து கொண்டதாக அக்கட்சியின் நிர்வாகி சினேகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஜினி – கமல் சந்திப்பில் நிச்சயம் அரசியல் பேசப்பட்டிருக்கும் எனவும் சினேகன் தகவல் தெரிவித்துள்ளார். 45 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் ரஜினியின் உடல்நிலை குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் பேசப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நண்பர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கோருவேன் என கமல் ஹாசன் கூறியிருந்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.