×

நயன்தாராவை உலுக்கிய நடிகர் விவேக் மரணம்!

நடிகர் விவேக் மறைவுக்கு நயன்தாரா இரங்கல் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் மேட்டுகுப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நகைச்சுவை மூலம் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்த விவேக், மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். இப்படிப்பட்ட மாபெரும் மனிதரின் மறைவு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் நடிகர் நயன்தாரா
 

நடிகர் விவேக் மறைவுக்கு நயன்தாரா இரங்கல் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் விவேக் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் மேட்டுகுப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நகைச்சுவை மூலம் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்த விவேக், மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். இப்படிப்பட்ட மாபெரும் மனிதரின் மறைவு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் நயன்தாரா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “நடிகர் விவேக்குடன் பல ஆண்டுகளாக, குறிப்பாக விஸ்வாசத்தில் பணிபுரிந்தபோது எனக்கு இருந்த அற்புதமான நினைவுகளை எப்போதும் நினைத்து மகிழ்ச்சியடைவேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு சென்றுவிடுவார் என நினைக்கவில்லை. நம்பமுடியாத மற்றும் கணிக்க முடியாத வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும் என்பதை நடிகர் விவேக்கின் மரணம் காட்டுகிறது.

நடிகர் விவேக்கின் குடும்பத்திற்கு எனது இரங்கல் மற்றும் இந்த இழப்பை எதிர்கொள்ள கடவுள் அவர்களுக்கு வலிமையை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.