×

#அனுபவமே_பாடம் ; தவறைத் தவிர்த்திருக்கலாம் : நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்!

ராகவேந்திரா திருமண மண்டபம் சொத்து வரி விவகாரத்தில் தவறை தவிர்த்திருக்கலாம் அனுபவமே பாடம் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரம் குறித்து எழுந்த சர்ச்சையால் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகவேந்திரா மண்டப சொத்து வரி…நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்” என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா பொதுமுடக்கம் காரணாமாக கடந்த 6 மாத காலமாக தமிழகம் முழுவதும் பொழுதுபோக்கு இடங்கள், திருமண மண்டபங்கள் மூடப்பட்டு கிடந்தன.
 

ராகவேந்திரா திருமண மண்டபம் சொத்து வரி விவகாரத்தில் தவறை தவிர்த்திருக்கலாம் அனுபவமே பாடம் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரம் குறித்து எழுந்த சர்ச்சையால் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகவேந்திரா மண்டப சொத்து வரி…நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.
தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணாமாக கடந்த 6 மாத காலமாக தமிழகம் முழுவதும் பொழுதுபோக்கு இடங்கள், திருமண மண்டபங்கள் மூடப்பட்டு கிடந்தன. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி கோரியுள்ளது. ஆனால் ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கத்தால் மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாக இருந்ததால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என ரஜினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் சென்னை மாநகராட்சிக்கு கடந்த 23ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியும் இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநகராட்சிக்கு அவகாசம் அளிக்காமல் அவசரப்பட்டு வழக்கு தொடர்ந்தது ஏன்? நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று காட்டமாக கூறியிருந்தது. இதனால் ரஜினி தனது மனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் அரசியல் கட்சி துவங்கி நடத்தவுள்ள ரஜினி இதுபோன்ற விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.