×

Man Vs Wild நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்…மோடியை தொடர்ந்து களத்தில் குதித்த சூப்பர் ஸ்டார்

எந்த இடத்திலும் நம்மால் தப்பித்து வெளியே வர முடியும் என்பதை MAN VS WILD என்ற நிகழ்ச்சி மூலம் நிரூபித்து வருகிறார் இவர் . பியர் கிரில்ஸ் சாகசத்துக்குப் பெயர்போனவர்…பிரிட்டனைச் சேர்ந்த வன ஆர்வலரான இவர் டிஸ்கவரி உள்ளிட்ட பிரபல டிவிக்களில் வனங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். வெயில் புகாத அமேசான் மழைக் காடுகள், தாங்க முடியாத வெப்பம் நிலவும் சஹாரா பாலைவனம், ஆர்டிக் பனிப்பிரதேசம், ஆபத்து நிறைந்த பசிபிக் தீவுகள், எரிமலைப் பள்ளத்தாக்குகள் என
 

எந்த இடத்திலும் நம்மால் தப்பித்து வெளியே வர முடியும் என்பதை MAN VS WILD என்ற நிகழ்ச்சி மூலம் நிரூபித்து வருகிறார் ‌இவர் . 

பியர் கிரில்ஸ் சாகசத்துக்குப் பெயர்போனவர்…பிரிட்டனைச் சேர்ந்த வன ஆர்வலரான இவர் டிஸ்கவரி உள்ளிட்ட பிரபல டிவிக்களில் வனங்கள் தொடர்பான‌ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். வெயில் புகாத அமேசான் மழைக் காடுகள், தாங்க முடியாத வெப்பம் நிலவும் சஹாரா பாலைவனம், ஆர்டிக் பனிப்பிரதேசம், ஆபத்து நிறைந்த பசிபிக் தீவுகள், எரிமலைப் பள்ளத்தாக்குகள் என எந்த இடத்திலும் நம்மால் தப்பித்து வெளியே வர முடியும் என்பதை MAN VS WILD என்ற நிகழ்ச்சி மூலம் நிரூபித்து வருகிறார் ‌இவர் . 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அமெரிக்க நடிகர்கள் ஜூலியா ராபர்ட்ஸ், நிக் ஜானஸ்,  உள்ளிட்டோருடனும் விளையாட்டு வீரர்களில் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்ட பிரபலங்களுடன் சாகச நிகழ்ச்சிகளை நடத்தியவர் பியர் கிரில்ஸ்‌.

டிஸ்கவரி சேனல் என்றாலே இவரின் MAN VS WILD நிகழ்ச்சியை தவறாமல் பார்க்கும் இந்திய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி தரும் தருணமாக இந்திய  பிரதமர் நரேந்திர மோடியும் இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பங்கேற்று  இருந்தார். 

 

இந்நிலையில் மோடியை தொடர்ந்து MAN VS WILD நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதற்காக படப்பிடிப்பு பந்திபுரா புலிகள் காப்பகத்தில் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதனால் பியர் கிரில்ஸுடன் ரஜினி  இரண்டு  நாட்கள் கலந்துகொள்ளவுள்ளாராம். இதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிகிறது.