×

MAN VS WILD நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எனக்குக் காயமா?.. விளக்கம் அளித்த ரஜினிகாந்த்

MAN VS WILD நிகழ்ச்சி படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள பந்திப்பூர் பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. டிஸ்கவரி சேனல் என்ற உடனே எல்லாருக்கும் நினைவு வருவது MAN VS WILD நிகழ்ச்சி தான். சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து நேற்று ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள பந்திப்பூர் பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது.
 

MAN VS WILD நிகழ்ச்சி படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள பந்திப்பூர் பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது.

டிஸ்கவரி சேனல் என்ற உடனே எல்லாருக்கும் நினைவு வருவது  MAN VS WILD நிகழ்ச்சி தான். சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து நேற்று ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள பந்திப்பூர் பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்துக்குக் கணுக்கால் மற்றும் தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளதாக நேற்று மாலை தகவல்கள் வெளியாகின. 

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ” Man vs Wild படப்பிடிப்பு பந்திப்பூரில் நடைபெற்றது. அதை முடித்து விட்டுத் தான் திரும்பி வந்தேன். எனக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி தான். எனக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை. காட்டில் அதிகமாக முட்கள் இருந்ததால், அவை தான் என் காலில் குத்தியது. மற்றபடி எந்த காயமும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அரசியலில் வருவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நோ கமெண்ட்ஸ் ” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.