×

Legend of Indian Cinema விருது பெற்ற பி.சி. ஸ்ரீராம்: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ஒளிப்பதிவாளர்கள் சங்கம்!

நடிகர் ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE” என்ற விருதை பிரகாஷ் ஜவடேகர் வழங்கி கவுரவித்தார். கோவாவில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் துவக்கிவைத்தார். மேலும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE” என்ற விருதை பிரகாஷ் ஜவடேகர் வழங்கி கவுரவித்தார். அத்துடன் இந்திய சினிமா துறையில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக ஆற்றிவரும்
 

நடிகர் ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE”  என்ற விருதை பிரகாஷ் ஜவடேகர் வழங்கி கவுரவித்தார்.

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.   இதன் தொடக்க விழாவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் துவக்கிவைத்தார். மேலும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE”  என்ற விருதை பிரகாஷ் ஜவடேகர் வழங்கி கவுரவித்தார்.

அத்துடன்  இந்திய சினிமா துறையில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக ஆற்றிவரும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமும்  அடக்கம். 

இந்நிலையில் இதுகுறித்து தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான legend of indian cinema என்ற விருதினை இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளரும், எங்கள் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவருமான பிசி ஸ்ரீராம் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்த, இந்திய அரசுக்கும் மற்றும் சர்வதேச  திரைப்பட  விழா குழுவிற்கும் நன்றி’யை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.