×

“பின்வாங்கிய ரஜினி; கட்சி ஆரம்பிக்கும் மனைவி” : சிறப்பு பூஜை நடத்திய இளையமகள்?!

லதா ரஜினிகாந்த் புதிய கட்சி ஒன்றை தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தான் அரசியலுக்கு வர இருப்பதாக ரஜினி அறிவித்தார். இதன்பிறகு அவரது பணிகளில் சுணக்கம் ஏற்பட, கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் அரசியல் பேச்சை ஆரம்பித்த அவர், ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக இருந்த நிலையில் அவருக்கு
 

லதா ரஜினிகாந்த் புதிய கட்சி ஒன்றை தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தான் அரசியலுக்கு வர இருப்பதாக ரஜினி அறிவித்தார். இதன்பிறகு அவரது பணிகளில் சுணக்கம் ஏற்பட, கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் அரசியல் பேச்சை ஆரம்பித்த அவர், ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக இருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல்நலக்குறைவினால் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரஜினி சென்னைக்குத் திரும்பியதும் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் . ரஜினியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பலருக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் செய்தார். அப்போது அவர் தனது அம்மா லதா ரஜினிகாந்த் ஆரம்பிக்க உள்ள புதிய கட்சி வெற்றியடைய சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன் ரஜினிகாந்தின் உடல்நலம் பூரண நலம் பெற வேண்டும் எனவும் அவர் எடுக்கும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு உள்ளது.இதன் மூலம் இன்னும் ஒரு சில நாட்களில் லதா ரஜினிகாந்த் ஆரம்பிக்கப் போகும் கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.