×

’முதல் பக்கத்தில் ஏன் இவரைப் பற்றிய செய்தி?’ குஷ்புவின் கோபம் யாரை நோக்கி?

குஷ்பு சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான திருவல்லிக்கேணி சேப்பாக்கம் பகுதிக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அந்தப்பகுதியில் அவர் சட்டமன்ற தேர்தலுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சமூக ஊடங்களில் எப்போதும் ஆக்டிவாகக இருப்பவர் குஷ்பு. அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பாஜகவின் சில திட்டங்களை ஆதரித்து அவர் பேசியிருந்தார்; சமூக ஊடங்களில் பதிவிட்டும் இருந்தார். அது
 

குஷ்பு சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான திருவல்லிக்கேணி சேப்பாக்கம் பகுதிக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அந்தப்பகுதியில் அவர் சட்டமன்ற தேர்தலுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சமூக ஊடங்களில் எப்போதும் ஆக்டிவாகக இருப்பவர் குஷ்பு. அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பாஜகவின் சில திட்டங்களை ஆதரித்து அவர் பேசியிருந்தார்; சமூக ஊடங்களில் பதிவிட்டும் இருந்தார். அது அப்போதே காங்கிரஸ் கட்சிக்குள் சில விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இப்போது அவர் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில் ’இவருக்கு ஏன் முதல் பக்கத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது’ என்பதாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார். “அவர் சட்டவிரோதமாக மோசடி செய்யப்பட்டிருப்பது நிருபிக்கப்பட்டது. அதற்கு நட்பைப் பயன்படுத்தினார். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியமைக்காக சிறை தண்டனை கிடைத்தது’ என்று கேட்டிருக்கிறார்.

ஆனால், குஷ்வு தனது ட்விட்டில் யார் பெயரையும் ஒரு குறிப்பிடவில்லை. இவர்தான் என்று எவரையும் சுற்றவில்லை. ஆனபோதும் இப்போதைய சூழலைப் பொறுத்தவரை பார்க்கையில் அவர் சசிகலாவை தான் சொல்கிறார் என்று புரிந்து கொள்ள முடியும்.

சசிகலாவை அதிமுக வோடு இணைக்கும் யோசனையில் பாரதிய ஜனதா கட்சி இருப்பதாகவே பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து சசிகலாவுக்கு எதிரான கருத்தைப் போல ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார் குஷ்பு.

ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பு கொண்டிருப்பவர் குஷ்பு. ’ஜெயலலிதாவின் ஆளுமை அவர் ஜெயலலிதாவின் துணிச்சல் தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்றும், பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஜெயலலிதா உதாரணம்’ பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அப்படி இருக்கையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவை பற்றி இப்படி ஒரு பதிவு செய்திருப்பது பலருக்கு ஆச்சர்யமே. ஊடகங்கள் சசிகலாவுக்கு மிக அதிக அளவில் கவனம் கொடுக்கின்றன என்கின்ற ஆதங்கத்தில் கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.