×

கலைமாமணி விருது : 130 பேருக்கு இன்று வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி

2019 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பட்டியல் நேற்று தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதில் 2019 ஆம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது , நடிகை சரோஜாதேவி , பாடகி பி. சுசிலா மற்றும் நடன கலைஞர் அம்பிகா காமேஷ்வர் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2020 ஆம் ஆண்டுக்கான புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா விருது பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, பாடகி ஜமுனாராணி மற்றும் நடன கலைஞர் பார்வதி
 

2019 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பட்டியல் நேற்று தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதில் 2019 ஆம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது , நடிகை சரோஜாதேவி , பாடகி பி. சுசிலா மற்றும் நடன கலைஞர் அம்பிகா காமேஷ்வர் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2020 ஆம் ஆண்டுக்கான புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா விருது பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, பாடகி ஜமுனாராணி மற்றும் நடன கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நடிகர்கள் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ,நடிகர் யோகிபாபு ,நடிகை தேவதர்ஷினி, இசையமைப்பாளர் தீனா, பின்னணி பாடகி சுஜாதா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ,சண்டை பயிற்சியாளர் தினேஷ் , நடன இயக்குநர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இயல், இசை, நாட்டியம், நாடகம் ,திரைப்படம், சின்னத்திரை ,கிராமிய கலை மற்றும் இதர பிரிவுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு கலைமாமணி விருதுகளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி. 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி வெற்றிபெற்ற கலைஞர்களுக்கு வழங்குகிறார். நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ் ,சரோஜாதேவி உள்பட சுமார் 130 பேருக்கு நேற்று விருதுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.