×

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ. 25 லட்சம் நிதியுதவி!

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். சினிமாவில் கூட சமூகம் சார்ந்த கருத்துக்களை முன்வைத்து வரும் நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை அறிந்த அவர் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகள்
 

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார்.

சினிமாவில் கூட சமூகம் சார்ந்த கருத்துக்களை முன்வைத்து வரும் நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை அறிந்த அவர் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். இருப்பினும் தனது கருத்தில் பின்வாங்காத அவருக்கு அவரின் கணவர் சூர்யா மற்றும் ரசிகர்கள் உறுதுணையாக இருந்தனர்.

இந்நிலையில் நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார்.

தமிழக சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டுள்ளது.

ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் .சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து நடிகை ஜோதிகாவின் செயலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.