×

பிக்பாஸ் பாலாஜி மீது ஜோ மைக்கேல் மானநஷ்ட ஈடு கேட்டு வழக்கு

விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்ற போட்டியாளர்களில் மிகவும் பிரபலமான நடிகரும் மாடலுமான பாலாஜி முருகதாஸ் என்பவர் மீது ஜோ மைக்கேல் பிரவின் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் நடிகர். பாலாஜி முருகதாஸ். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சக போட்டியாளரான சனம் ஷெட்டியுடன் பேசிய போது ஜோ
 

விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்ற போட்டியாளர்களில் மிகவும் பிரபலமான நடிகரும் மாடலுமான பாலாஜி முருகதாஸ் என்பவர் மீது ஜோ மைக்கேல் பிரவின் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் நடிகர். பாலாஜி முருகதாஸ். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சக போட்டியாளரான சனம் ஷெட்டியுடன் பேசிய போது ஜோ மைக்கேல்லின் பிரபல மாடலிங் நிறுவனத்தை டுபாக்கூர் கம்பெனி என விமர்சித்தார்.

இதனால் அந்நிறுவனத்தின் உரிமையாளரான ஜோ மைக்கேன் பிரவின், பாலாஜியிடம் மானநஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்த மனுவில், பிக்பாஸ் வீட்டில் வைத்து பாலாஜி அவரையும் அவர் கம்பெனியையும் அதில் கலந்துகொண்ட பெண்களையும் தவறாக சித்தரித்ததாக புகார் கூறியுள்ளார். பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாகவும் ஜோ மைக்கேல் எச்சரித்துள்ளார்.